sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

துருக்கி சுற்றுலா அமைச்சகம் நடத்திய இந்தியா ரோட்ஷோ

/

துருக்கி சுற்றுலா அமைச்சகம் நடத்திய இந்தியா ரோட்ஷோ

துருக்கி சுற்றுலா அமைச்சகம் நடத்திய இந்தியா ரோட்ஷோ

துருக்கி சுற்றுலா அமைச்சகம் நடத்திய இந்தியா ரோட்ஷோ


UPDATED : பிப் 04, 2024 12:00 AM

ADDED : பிப் 04, 2024 10:11 AM

Google News

UPDATED : பிப் 04, 2024 12:00 AM ADDED : பிப் 04, 2024 10:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
துருக்கி நாட்டின் கலாசாரம், சுற்றுலா அமைச்சகம், துருக்கி சுற்றுலா ஊக்குவிப்பு - மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய பயண முகவர்கள் சங்கம் இணைந்து, இந்தியா ரோட்ஷோ - 2024 நிகழ்வை, சென்னையில் நடத்தியது.இந்தியா - துருக்கி நாடுகளுக்கு இடையேயான நட்பை வளர்க்கவும் விதமாக, அண்ணா சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில், இந்நிகழ்வு நடத்தப்பட்டது.துருக்கியில் இயங்கும் பயண முகவர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இந்திய உணவகங்கள் உட்பட 28 துருக்கிய பங்குதாரர்கள், தமிழகத்தைச் சேர்ந்த 170 பயண முகவர்கள் பங்கேற்றனர்.துருக்கி நாட்டு வரலாற்று இடங்கள், அரண்மனைகள், நீர்த்தேக்கங்கள் உள்ளிட்டவை குறித்த வீடியோ காட்சி, இந்நிகழ்வில் திரையிடப்பட்டது. துருக்கி துாதரகத்தின் கலாசாரம் மற்றும் சுற்றுலா ஆலோசகர், ஹாசன் டெனிஸ் எர்சோஸ், ஒருங்கிணைப்பாளர் ஆருஷி அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.இந்திய பயண முகவர்கள் சங்கம், தெற்கு பகுதி தலைவர் தேவகி பேசுகையில், துருக்கி விசா பெறுவதற்கான சான்றிதழ்களை, வெளியுறவு அமைச்சகத்திடம் சரிபார்த்து கையெழுத்து பெற்று அனுப்ப 20- 30 நாட்கள் ஆகிறது. விசா வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us