படிப்பில் கவனம் செலுத்தணும்: முகாமில் நீதிபதிகள் அறிவுரை
படிப்பில் கவனம் செலுத்தணும்: முகாமில் நீதிபதிகள் அறிவுரை
UPDATED : பிப் 04, 2024 12:00 AM
ADDED : பிப் 04, 2024 10:14 AM
உடுமலை:
உடுமலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி மணிகண்டன் தலைமை வகித்தார்.மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் விஜயகுமார், மீனாட்சி, வக்கீல்கள் மகேஸ்வரன், பிரபாகரன், மகாலட்சுமி, குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், நீதிபதிகள் பேசுகையில், குழந்தைகள், சமூகத்தில் தங்களை சுற்றி நடக்கும் குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். மொபைல் போனை படிப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.புகையிலை போன்ற போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபடாமலும், சினிமாவில் காட்டப்படும் மாய உலகத்தை நிஜம் என நம்பி வாழ்க்கையை இழந்து விடாதீர்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி நன்கு படித்து நற்பெயர் பெற வேண்டும். விளையாட்டு, ஓவியம், நடனம், தற்காப்பு போன்ற கூடுதல் கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றனர்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜோதிமணி, ஆசிரியர்கள் சக்திவேல் ராஜா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ மாணவியர் பங்கேற்றனர். முன்னதாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.