UPDATED : பிப் 04, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 09:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹொஸ்கோட்:
மாணவர் ஒருவரின் விலை உயர்ந்த மொபைல் போனை உடைத்த, கல்லுாரி முதல்வர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.பெங்களூரு ரூரல், ஹொஸ்கோட்டில் உள்ள தனியார் பி.யு.சி., கல்லுாரியில் வகுப்புகளுக்கு மாணவர்கள் மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சூர்யா என்ற மாணவர், வகுப்புக்கு மொபைல் போன் கொண்டு வந்தார்.நண்பர்களுடன் சேர்ந்து, ரீல்ஸ் செய்துள்ளார். இதை பார்த்த கல்லுாரி முதல்வர், கோபமடைந்து மாணவரின் விலை உயர்ந்த மொபைல் போனை பறித்து, கீழே போட்டு உடைத்துள்ளார். விலை உயர்ந்த போனை உடைத்ததால், கல்லுாரி முதல்வர் மீது, ஹொஸ்கோட் போலீஸ் நிலையத்தில், மாணவரின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.