UPDATED : பிப் 14, 2024 12:00 AM
ADDED : பிப் 14, 2024 09:33 AM
மங்களூரு:
ஸ்ரீராமரை அவமதிப்பாக பேசியதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, மங்களூரு தனியார் பள்ளி ஆசிரியை, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம், மங்களூரில் செயின்ட் ஜெரோசா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு ஆசிரியை சிஸ்டர் பிரபா. சமீபத்தில் இவர், ஒர்க் ஈஸ் ஒர்ஷிப் என்ற தலைப்பில் பாடம் நடத்தினார். அப்போது அவர், அயோத்தி ராமரை கல் எனப் பேசியுள்ளார்.இதையறிந்து, கொதிப்படைந்த மாணவர்களின் பெற்றோர், ஹிந்து அமைப்பினர், ராமரை அவமதித்த ஆசிரியை பிரபா மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். மூன்று நாட்களாகியும், பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து மங்களூரு தெற்கு பா.ஜ., எம்.எல்.ஏ., வேதவியாஸ் காமத் தலைமையில், ஹிந்து அமைப்பினர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். பள்ளியை முற்றுகையிட முயற்சித்தனர். மாணவர்களின் பெற்றோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.தகவலறிந்து அங்கு வந்த மங்களூரு போலீசார், எம்.எல்.ஏ.,வையும், பெற்றோரையும் தடுத்து நிறுத்தினர். இவர்களின் நெருக்கடிக்கு பணிந்த பள்ளி நிர்வாகம், ஆசிரியை பிரபாவை சஸ்பெண்ட் செய்தது.