UPDATED : பிப் 15, 2024 12:00 AM
ADDED : பிப் 15, 2024 11:48 AM
சென்னை:
அரசு பள்ளி ஆசிரியர்களில், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்ய, தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், 50 வயதுக்கு மேல், 1.06 லட்சம் ஆசிரியர்கள்; அதற்கு கீழ், 1.17 லட்சம் ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், முதற்கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அவர்களையும் மூன்றாக பிரித்து, ஆண்டுக்கு 35,000 ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய, ஆசிரியருக்கு 1,000 ரூபாய் வீதம் 3.56 கோடி ரூபாயை, தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வித்துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.