மருத்துவ தேர்வு நடைமுறையை வீடியோ எடுக்க அறிவுறுத்தல்
மருத்துவ தேர்வு நடைமுறையை வீடியோ எடுக்க அறிவுறுத்தல்
UPDATED : பிப் 15, 2024 12:00 AM
ADDED : பிப் 15, 2024 11:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இது குறித்து, இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குனர் ஷம்பு சரண் குமார் வெளியிட்ட அறிவிப்பு:
அனைத்து மருத்துவக் கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளிலும் நடைபெறும் தேர்வுகளின் முக்கிய நடைமுறைகளை, ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.இந்த நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த, முதுநிலை தேர்வு கண்காணிப்பாளர்கள், தேர்வு நடைமுறைகளின் தலைவராகவும், மதிப்பீட்டாளராகவும் செயல்படுவர். மற்ற அனைத்து கண்காணிப்பாளர்களின் விபரங்களையும் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டாளர்களின் கையொப்பத்துடன் பூர்த்தி செய்து, ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.