UPDATED : பிப் 19, 2024 12:00 AM
ADDED : பிப் 19, 2024 07:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பொக்கசமுத்திரம் கிராமத்தில், மருத்துவம் படிக்காமல், ஒருவர் கிளினிக் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. அதன்படி, வெம்பாக்கம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சுரேஷ்பாபு தலைமையிலான குழுவினர், பொக்கசமுத்திரம் கிராமத்தில் நேற்று சோதனை நடத்தினர்.இதில், டிப்ளமோ பார்மசி படித்த விஸ்வநாதன், 49, கிளினிக் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. அவரிடம் ஆங்கில மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். பிரம்மதேசம் போலீசார் விஸ்வநாதனை கைது செய்தனர்.