கட்டணமில்லா ஆங்கில வழி கல்வியில் சேர்க்க விழிப்புணர்வு
கட்டணமில்லா ஆங்கில வழி கல்வியில் சேர்க்க விழிப்புணர்வு
UPDATED : மார் 18, 2024 12:00 AM
ADDED : மார் 18, 2024 09:29 AM
பெ.நா.பாளையம்:
அரசு பள்ளிகளில், கட்டணமில்லா ஆங்கில வழி கல்வியில், மாணவர்களை சேர்க்கும் விழிப்புணர்வு பிரசாரத்தில் பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆங்கில வழிக்கல்வி ஒன்று முதல், 8 வகுப்புகளுக்கு வழங்கப்படுகின்றன. இங்கு மாணவர்களின் தலைமை பண்பை வளர்த்திட, மாணவர் தலைவர் தேர்தல் நடக்கிறது.தினமும் யோகா, தியான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குறுந்தகடு வாயிலாக ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி வழங்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், பெண் குழந்தைகளுக்கு கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு தமிழக அரசால் பாடப்புத்தகங்கள், காலணி, நோட்டுகள், மதிய உணவு, சீருடைகள், புத்தகப்பை, காலை உணவு ஆகியவை வழங்கப்படுகின்றன. இக்கருத்துக்கள் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை பெட்டதாபுரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.இது தொடர்பான மாணவர் சேர்க்கை பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் துவக்கி வைத்தார். இதில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரதி, கல்வியாளர் ரங்கசாமி, இல்லம் தேடி கல்வி குழு தன்னார்வலர்கள், வாசிப்பு இயக்க பொறுப்பாளர் கண்ணம்மாள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.