UPDATED : ஏப் 10, 2024 12:00 AM
ADDED : ஏப் 10, 2024 10:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:
கொடைக்கானல் வன சுற்றுலாத்தலமான துாண்பாறையில் வனத்துறை செல்பி பாயின்ட் அமைத்து வருகிறது.
கொடைக்கானலில் வன சுற்றுலாத்தலங்களாக மேயர் சதுக்கம், குணா குகை, துாண்பாறை, பைன் மரக்காடுகள் உள்ளன. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
சில ஆண்டாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக துாண் பாறை பகுதியில் 3டி யானை, மோயர் சதுக்கத்தில் காட்டுமாடு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றது.
தற்போது துாண் பாறையில் மேலும் மெருகேற்றும் விதமாக ஐ லவ் பாரஸ்ட் கொடைக்கானல் என்ற வாசகத்துடன் செல்பி பாயின்ட் அமைக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.