ஹெல்த் டிரிங் பிரிவிலிருந்து போர்ன்விட்டாவை நீக்க ஆணை
ஹெல்த் டிரிங் பிரிவிலிருந்து போர்ன்விட்டாவை நீக்க ஆணை
UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 10:46 AM
புதுடில்லி:
போர்ன்விட்டா உட்பட அதுபோன்ற அனைத்து பானங்களையும் 'ஹெல்த் டிரிங்' எனும் ஆரோக்கிய பானம் பிரிவிலிருந்து நீக்குமாறு, ஆன்லைன் வர்த்தக தளங்களை, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம் 2006ன் படி, ஹெல்த் டிரிங் என்ற சொல் வரையறுக்கப்படவில்லை என்றும், சுவையூட்டப்பட்ட பானங்களே பொதுவாக ஹெல்த் டிரிங்காக கருதப்படுவதாகவும், அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, போர்ன்விட்டா உள்ளிட்ட அதுபோன்ற பானங்களை, அனைத்து ஆன்லைன் வர்த்தக தளங்களும் ஹெல்த் டிரிங் பிரிவிலிருந்து நீக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த மாத துவக்கத்தில், பால், தானியம் மற்றும் மால்ட் சார்ந்த பானங்களை, ஹெல்த் டிரிங் என விளம்பரப்படுத்துவதை நிறுத்துமாறு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு பொருளை தவறாக வகைப்படுத்துவது, நுகர்வோரை தவறாக வழிநடத்தும் என்பதால், உணவு வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வர்த்தக தளங்களும் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.