UPDATED : மே 07, 2024 12:00 AM
ADDED : மே 07, 2024 09:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:
ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்களுக்கான, இ-பாஸ் இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, இன்று, 7ம் தேதி முதல், இ--பாஸ் பதிவு செய்து வர வேண்டும்.
அதன்படி, மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள், இ--பாஸ் பெறுவதற்கு, epass.tnega.org என்ற இணையதள முகவரியில் நேற்று, (6ம் தேதி) காலை, 6:00 மணி முதல் பதிவு செய்து, இ-பாஸ் பெற்று கொள்ளப்பட்டு வருகின்றன. இ-பாஸ் பதிவு நடைமுறை ஜூன், 30ம் தேதி வரை இருக்கும்.