தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி, மருத்துவமனைக்கு தொல்லை கொடுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள்

பள்ளி, மருத்துவமனைக்கு தொல்லை கொடுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள்

பள்ளி, மருத்துவமனைக்கு தொல்லை கொடுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள்


UPDATED : மே 13, 2024 12:00 AM

ADDED : மே 13, 2024 05:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2024 12:00 AM ADDED : மே 13, 2024 05:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
ராஜஸ்தானில் 5 பள்ளிகளுக்கும், டில்லியில் மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெடி குண்டு நிபுணர்கள் துப்பறியும் நாய்கள் மூலம் நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை.

கடந்த மே மாதம் டில்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு இ மெயில் வாயிலாக மிரட்டல் வந்த நிலையில் இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள 5 பள்ளிகளுக்கு இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. பள்ளகளில் மாணவர்களை வெளியேற்றி, சோதனை நடத்தப்பட்டது.

இது போல் டில்லி சர்வதேச இந்திராகாந்தி விமான நிலையம், சஞ்சய்காந்தி நினைவு மருத்துவமனை , குருதேவ்பகதூர் மருத்துவமனை, பாரா ஹிந்து ராவ், ஜனக்புரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தீன்தயாள், டாப்ரிஸ் தாதாதேவ், அருணா அஷ்ரப்அலி அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றிக்கு இ மெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் சோதனை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us