தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்திரமாக பூமிக்குத் திரும்புவோம்: என்கிறார் சுனிதா வில்லியம்ஸ்

பத்திரமாக பூமிக்குத் திரும்புவோம்: என்கிறார் சுனிதா வில்லியம்ஸ்

பத்திரமாக பூமிக்குத் திரும்புவோம்: என்கிறார் சுனிதா வில்லியம்ஸ்


UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM

ADDED : ஜூலை 12, 2024 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM ADDED : ஜூலை 12, 2024 10:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து போயிங் நிறுவன ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் கடந்த ஜூன் 5ம் தேதி பயணம் மேற்கொண்டனர். ஜூன் 5ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி இரவு 8.22 மணிக்கு வெற்றிகரமாக புறப்பட்டு, ஜூன் 06ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்.

9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தினர். பின்னர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. திட்டமிட்டபடி ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில் நுட்பக் கோளாறுகள் காரணமாக பூமி வருவது ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், விண்வெளியில் இருந்து தாங்கள் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என சுனிதாவும், வில்மோரும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்கள் 'எங்களை போயிங் விண்கலம் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும். இங்கு நாங்கள் சிக்கிக்கொண்டதாக நினைக்கவில்லை. சக விண்வெளி வீரர்களுக்கு உதவ, எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகவே இதை பார்க்கிறோம் என கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us