புத்தகம் படிப்பது மனநலனை மேம்படுத்தும்: கமிஷனர் பேச்சு
புத்தகம் படிப்பது மனநலனை மேம்படுத்தும்: கமிஷனர் பேச்சு
UPDATED : ஆக 09, 2024 12:00 AM
ADDED : ஆக 09, 2024 09:57 AM
கோவை:
விளையாட்டு, நல்ல புத்தகங்களை படிப்பது, மனம், உடல்நலத்தை மேம்படுத்தும் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசினார்.
சைபர் குற்றங்கள், போதைப்பொருள் இல்லாத கோவை எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ சக்தி இன்ஜி., தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது.
போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், போதைப்பொருட்களால் மாணவர்கள் அதிகளவில் பிரச்னைகளை சந்திக்கின்றனர். சமூக ஊடக தொடர்புகள் வாயிலாக மாணவர்கள் தாங்களே அறியாமல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். விளையாட்டு, நல்ல புத்தகங்களைப் படிப்பது, இசை கேட்பது, ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்ற நேர்மறையான பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது மனம், உடல்நலத்தை மேம்படுத்தும். மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்க போலீஸ் அக்கா மற்றும் போலீஸ் பிரதர் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றார். ஸ்ரீ சக்தி நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.