எட்டு இந்திய மொழிகளில் அடோப்பி எக்ஸ்பிரஸ் அறிமுகம்
எட்டு இந்திய மொழிகளில் அடோப்பி எக்ஸ்பிரஸ் அறிமுகம்
UPDATED : செப் 17, 2024 12:00 AM
ADDED : செப் 16, 2024 05:30 PM

அடோப்பி எக்ஸ்பிரஸ் தற்போது 8 இந்திய மொழிகளில் அறிமுகப்படுத்தி உள்ளது. டெஸ்க்டாப் வெப்-புக்கான அடோப்பி எக்ஸ்பிரஸில் உள்ள மொழிபெயர்ப்பு அம்சம் இப்போது இந்தி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய எட்டு இந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும்.
இதன்மூலம், மாணவர்கள் முதல் கன்டண்ட் உருவாக்குபவர்கள் வரை அனைவரும் அடோப்பி பயர்ப்ளை (Adobe Firefly) இயங்கும் ஜென் ஏஐ (GenAI) அம்சங்களை அடோப்பி எக்ஸ்பிரஸில் (ஜெனரேடிவ் பில் மற்றும் ஜெனரேட் இமேஜ் போன்றவை) பயன்படுத்த முடியும். மேலும் வீடியோக்கள், பிளையர்கள், ரெஸ்யூம்கள், பேனர்கள், லோகோக்கள் மற்றும் பலவற்றை விரைவாகவும் எளிதாகவும் உருவாக்க முடியும்.
அடோப்பி எக்ஸ்பிரஸ் மற்றும் டிஜிட்டல் மீடியா சேவைகளின் மூத்த துணைத் தலைவர் கோவிந்த் பாலகிருஷ்ணன் கூறுகையில் அடோப்பி-ல், எங்களது சக்தி வாய்ந்த வடிவமைப்புக் கருவிகள் மற்றும் புராடக்டுகளை அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தியுள்ளோம், என்றார்.
பல இந்திய மொழிகளில் யூஸர் இன்டர்பேஸ் மற்றும் மொழிபெயர்ப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப சந்தையில் இதன் பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்கிறார் நேஹா டூடுல்ஸ் பிரபலமும், படைப்பாளியுமான நேஹா ஷர்மா.
இந்தியாவிற்கான அடோப்பி எக்ஸ்பிரஸில் புதிய சிறப்பம்சங்கள்
*தானியங்கு மொழிபெயர்ப்பு: தனிப்பட்ட மற்றும் பல பக்கங்கள் கொண்ட பைல்களில் உள்ள தரவுகளை சிரமமின்றி மொழிபெயர்க்க உதவுகிறது. மொழியாக்க சிறப்பம்சம் ஒரு பிரீமியம் சலுகையாகும். ஆனால் தற்போது குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகக் கிடைக்கும். பயனர்கள் இந்த சிறப்பம்சத்தைப் பயன்படுத்தி, அடோப்பி எக்ஸ்பிரஸின் விரிவான ஆங்கில டெம்ப்ளேட்களை தங்களுக்கு விருப்பமானமொழிகளில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
*உள்ளூர் மயமாக்கப்பட்ட யுஐ (UI): யூஸர் இண்டர்பேஸ் இப்போது இந்தி, தமிழ், வங்காளம் ஆகிய மொழிகளில் பயன்படுத்தலாம். இதனால் அடோப்பி எக்ஸ்பிரஸின் பயன்பாடு விரிவடையும்.
*டெக்ஸ்ட்-எலிமெண்ட் மொழிபெயர்ப்பு: இடப்பெயர்கள், பிராண்ட் பெயர்கள்,மற்றும் பிற குறிப்பிட்ட விவரங்கள் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்து, எந்த டெக்ஸ்ட் மற்றும் எலிமெண்ட்கள் மொழி பெயர்க்கப்படுகின்றன என்பதை பயனர்கள் தேர்ந்தெடுத்து கட்டுப்படுத்தலாம்.
*சுலபமான மொழி பெயர்ப்பு: ஒரே கிளிக்கில் பல பக்கங்களில் உள்ள கன்டெண்டுகளை மொழிபெயர்த்து, பணிச் சுமையை குறைக்கிறது.
கம்ப்யூட்டர், மொபைல் ஆகியவற்றில் அடோப்பி எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லை. அடோப்பி எக்ஸ்பிரஸ் ப்ரீமியம் பிளான் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும் அதன்பின் கட்டணம் செலுத்தியே பெறமுடியும்.
பயனர்கள் இணையத்தில் அடோப்பி எக்ஸ்பிரஸை அணுகலாம் அல்லது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களில் அடோப்பி எக்ஸ்பிரஸைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு: www.adobe.com இணையதளத்தை பார்வையிடலாம்.