sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு பள்ளியில் பேஸ் பயோமெட்ரிக் இயந்திரம் அறிமுகம்

/

அரசு பள்ளியில் பேஸ் பயோமெட்ரிக் இயந்திரம் அறிமுகம்

அரசு பள்ளியில் பேஸ் பயோமெட்ரிக் இயந்திரம் அறிமுகம்

அரசு பள்ளியில் பேஸ் பயோமெட்ரிக் இயந்திரம் அறிமுகம்


UPDATED : அக் 10, 2024 12:00 AM

ADDED : அக் 10, 2024 12:56 PM

Google News

UPDATED : அக் 10, 2024 12:00 AM ADDED : அக் 10, 2024 12:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாண்டியா:
அரசு துவக்கப் பள்ளி ஒன்றில், பேஸ் பயோமெட்ரிக் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களிடையே நேரம் தவறாமை குறித்து, விழிப்புணர்வு ஏற்பட உதவியாக உள்ளது.

மாண்டியாவின், தக்கஹள்ளி கிராமத்தின் தொடக்க பள்ளி மேம்பாட்டு கமிட்டி வெளியிட்ட அறிக்கை:

அரசின் நிதியுதவிக்காக காத்திராமல், பள்ளி மேம்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் உதவியுடன், ஒரு லட்சம் ரூபாய் சேகரித்து, பள்ளியில் பேஸ் பயோமெட்ரிக் இயந்திரம் பொருத்தி உள்ளோம்.

இரண்டு வினாடி

மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு ஆஜராமல் இருப்பதை தடுக்க, இயந்திரம் உதவியாக உள்ளது. பேஸ் பயோமெட்ரிக் இயந்திரத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு வினாடிகளில் ஒருவரின் வருகை பதிவாகிறது. இயந்திரம் பொருத்திய பின், 98 சதவீதம் மாணவர்கள் வருகை பதிவாகிறது.

வரும் நாட்களில் பள்ளிக்கு மட்டம் போடும் மாணவர்கள் குறித்து, பெற்றோரின் மொபைல் போனுக்கு தகவல் அனுப்ப முடிவு செய்துள்ளோம். கடந்த, 2022 - 23ம் ஆண்டு, மத்திய அரசின் பி.எம்., ஸ்ரீ ஸ்கூல் பார் ரைசிங் இந்தியா திட்டத்துக்கு, 129 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் தக்கஹள்ளி கிராமத்தின் பள்ளியும் ஒன்றாகும்.

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, அதிநவீன தொழில்நுட்பத்தில் கல்வி போதிப்பது, கல்வி தரத்தை உயர்த்துவது திட்டத்தின் நோக்கமாகும். திட்டத்தின் கீழ், இதுவரை 14 லட்சம் ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. இந்த நிதியில் 3 லட்சம் ரூபாய் செலவிட்டு, டிஜிட்டல் லைப்ரரி துவக்கப்பட்டது. மாணவர்களுக்காக நான்கு கம்ப்யூட்டர்கள் வாங்கி உள்ளோம்.

ஸ்மார்ட் கிளாஸ்


ஒரு லட்சம் ரூபாய் செலவில், ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்பட்டது. வகுப்புகளுக்கு கிரீன் போர்டு வைக்கப்பட்டது. பள்ளி காம்பவுண்ட் சுவர்களில் மாணவர்களை கவரும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

பெங்களூரு ரோட்டரி நிறுவனத்தினர், 11 லட்சம் ரூபாய் செலவில், ஹைடெக் கழிப்பறை, பேக், டெஸ்க், உபகரணங்கள் வழங்கி உள்ளனர். பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளோம். தண்ணீர் ஒழுகிய வகுப்பறைகள், நரேகா திட்டத்தின் கீழ் பழுது பார்க்கப்பட்டது.

இத்தகைய நடவடிக்கையால், மாணவர் எண்ணிக்கை 151ல் இருந்து 250 ஆக அதிகரித்துள்ளது. பள்ளிக்கு எட்டு ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டன. தற்போது ஏழு ஆசிரியர்கள் உள்ளனர். ஒன்றாம் வகுப்பு முதல், நான்காம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி புதிதாக துவங்கப்பட்டுள்ளது.

ஆங்கில கல்விக்கு ஆசிரியர் பற்றாக்குறை இருந்தது. பள்ளி மேம்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள், கிராமத்தினர் உதவியுடன் மூன்று கவுரவ ஆசிரியர்கள், ஒரு ஆயா நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







      Dinamalar
      Follow us