உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பாலகிருஷ்ணன் நியமனம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பாலகிருஷ்ணன் நியமனம்
UPDATED : பிப் 27, 2025 12:00 AM
ADDED : பிப் 27, 2025 04:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலகிருஷ்ணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை வென்ற இவர், தமிழில் குடிமைப்பணி தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் 15 நூல்களின் ஆசிரியராவார்.
1984ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், ஒடிசா அரசிலும், இந்திய தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்