sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ கல்வி உதவித்தொகை தேர்வில் குளறுபடி அன்புமணி குற்றச்சாட்டு

கல்வி உதவித்தொகை தேர்வில் குளறுபடி அன்புமணி குற்றச்சாட்டு

கல்வி உதவித்தொகை தேர்வில் குளறுபடி அன்புமணி குற்றச்சாட்டு


UPDATED : ஏப் 19, 2025 12:00 AM

ADDED : ஏப் 19, 2025 08:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 19, 2025 12:00 AM ADDED : ஏப் 19, 2025 08:58 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தேசிய கல்வி உதவித்தொகை தேர்வில் நடந்த குளறுபடி குறித்து, விசாரணை நடத்த வேண்டும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:



மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக, தமிழக அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகத்தால் நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள், சில நாட்களுக்கு முன் வெளியாகின. அதில் அதிக மதிப்பெண் பெற்ற பலர் தேர்வு செய்யப்படவில்லை என்றும், அதே நேரத்தில் குறைந்தபட்ச மதிப்பெண்களைக் கூட பெறாத பலர் தேர்வு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களின் கல்வி தொடர்பான விவகாரத்தில், இந்த அளவுக்கு அலட்சியம் காட்டப்படுவது சரியல்ல. இது சமூக அநீதி.

எனவே, இதில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us