UPDATED : ஏப் 25, 2025 12:00 AM
ADDED : ஏப் 25, 2025 10:40 AM

நாமக்கல்:
ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, நாமக்கல்லில் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்- 1, பிளஸ்- 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிந்து, ஏற்கனவே விடுமுறை விடப்பட்டு உள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், 1ஆம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த, 17ஆம் தேதியே விடுமுறை விடப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு இறுதி தேர்வு நடந்து வந்த நிலையில், நேற்றுடன் தேர்வு முடிந்தது.
பள்ளியை விட்டு வெளியே வந்த மாணவர்கள், தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். ஒருசில மாணவர்கள் பேனா மையை சட்டையில் தெளித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதற்கிடையே வரும் ஜூன், 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

