UPDATED : ஜூன் 10, 2025 12:00 AM
ADDED : ஜூன் 10, 2025 09:35 AM

கோவை:
கோவை ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வின், அறிமுக வகுப்பு தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி கல்வி அலுவலர் தாம்சன் பங்கேற்றார். மாணவர்கள் எதிர்கொள்ளவுள்ள தேர்வுகள் குறித்து விளக்கமளித்த அவர், திறனறித் தேர்வின் நடைமுறை, கேள்வி வடிவம், நேரத்தை நிர்வகிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
உரைநடை, இலக்கணம், மொழித் திறன், செய்யுள் போன்ற தலைப்புகளை எளிமையாக எவ்வாறு படிக்கலாம் என்பதையும் எடுத்துரைத்து, மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
மாவட்ட தமிழ்மொழி திறனறி தேர்வு ஒருங்கிணைப்பாளர் முருகேசன் கூறுகையில், வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் நோக்கில், மாதிரி வினாத்தாள்கள் மூலம் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும், 100 மதிப்பெண்களுக்கு சிறு சிறு தேர்வுகள் நடத்தப்படும். இதன் வாயிலாக, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். இவ்வாறு தயாரிக்கப்படும் வினாத்தாள் தொகுப்புகள், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வாட்ஸ் அப் குழு வாயிலாக அனுப்பப்படும், என்றார்.