UPDATED : ஆக 26, 2025 12:00 AM
ADDED : ஆக 26, 2025 08:09 AM
சென்னை:
பள்ளி மாணவ - மாணவி யர் இடையே, மாற்றுத்திறனாளிகள் குறித்து புரிதல் ஏற்படுத்த, ஆட்டிசத்திற்கான ஒப்புயர்வு மையம், பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து, கட்டுரை போட்டியை நடத்தவுள்ளது .
பள்ளிகளில், 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.
போட்டியில் பங்கேற்போர், தாங்கள் சந்தித்த மாற்றுத்திறனாளி நண்பர், அவர் படிக்கும் வகுப்பு, அவரின் தேவைகள், அவர் மற்ற நண்பர்களுடன் இயல்பாக இணைந்திருக்க தான் எடுத்த முயற்சிகள், அவர் குறித்த தங்களின் புரிதல் போன்றவை குறித்து, 'எனது தோழன்' அல்லது ' எனது தோழி' என்ற தலைப் பில், இரண்டு பக்கங்களுக்குள் எழுத வேண்டும்.
அந்த கட்டுரைகளை வரும், 31ம் தேதிக்குள், 'myfriendceo@gmail.com' என்ற 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்ப வேண்டும். சிறந்த, 20 கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படும் என, பள்ளிக்கல்வி இயக்குநர், முதன்மை கல்வி அதிகாரி களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்து உள்ளார்.