பள்ளிகளுக்கு விடுமுறை ஆசிரியர் கூட்டமைப்பு நன்றி
பள்ளிகளுக்கு விடுமுறை ஆசிரியர் கூட்டமைப்பு நன்றி
UPDATED : நவ 15, 2025 07:49 AM
ADDED : நவ 15, 2025 07:50 AM
புதுச்சேரி:
புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்ததற்காக யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு, அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் எட்வர்டு சார்லஸ் அறிக்கை:
புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் இன்று (15ம் தேதி) தமிழ்நாடு தேர்வு ஆணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத உள்ளனர்.
அதனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்க வேண்டும் என, கூட்டமைப்பு சார்பில், கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று பள்ளி கல்வித்துறை இன்று விடுமுறை அறிவித்துள்ளது. இதற்காக, முயற்சிகள் கொண்ட கல்வித்துறை இயக்குநர், இணை இயக்குநர், உறுதுணையாக இருந்த கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

