UPDATED : நவ 17, 2025 07:49 AM
ADDED : நவ 17, 2025 07:50 AM
உடுமலை:
தேசிய நுாலக வார விழாவையொட்டி, உடுமலை கிளை நுாலகம் எண்-2ல், உண்டு, உறைவிட பள்ளி மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
உடுமலை கிளை நுாலகம் எண்-2ல், தேசிய நுாலக வார விழாவையொட்டி, தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதையொட்டி, உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் பயிலும், 40 மலைவாழ் மாணவர்கள் நுாலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு, வாசகர் வட்டத்தலைவர் இளமுருகு தலைமை வகித்தார். நூலகர்கள் மகேந்திரன், பூரணி வரவேற்றனர்.
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற விஜயலட்சுமிக்கு, நூலகர்கள் மற்றும் வாசகர் வட்டத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. நுாலக தந்தை ரங்கநாதன் உருவப்படத்துக்கு, வாசகர் வட்ட ஆலோசகர் ஐயப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நுாலக வாசகர் வட்டத்தின் வாயிலாக படித்து, போட்டித்தேர்வில் வெற்றி பெற்ற நவநீதன், சுரேந்திரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில், உடுமலை உண்டு உறைவிடப் பள்ளி காப்பாளர் புருஷோத்தமன், நியுராயல் லயன்ஸ் சங்கத்தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

