UPDATED : நவ 24, 2025 07:54 PM
ADDED : நவ 24, 2025 07:55 PM
தங்கவயல்:
திருக்குறள் ஒப்புவித்தல், தமிழ் மரபு நடனப் போட்டி, மாறு வேடப் போட்டி ஆகிய போட்டிகளை தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை அமைப்பு, 26ம் தேதி நடத்துகிறது.
இதற்கான விழா ராபர்ட்சன்பேட்டை அம்பேத்கர் சாலையில் உள்ள மொய்து மஹாலில் அன்று காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியத் தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர், மொய்து புகாரி, எஸ்.டி.குமார், சரவண பிரபு உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல், தமிழ் மரபு நடனம், தமிழ் ஆளுமைகளின் மாறுவேடம் ஆகிய போட்டிகள் நடக்கின்றன. தங்கவயலில் உள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இத்துடன் ஐ.ஏ.எஸ்., படிப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை வெற்றிசீலன், பிரதாப் குமார், அகஸ்டின், சம்பத், கோவலன் ஆகியோர் செய்துள்ளனர்.

