சென்டாக் ஆயுர்வேத இடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
சென்டாக் ஆயுர்வேத இடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
UPDATED : நவ 25, 2025 08:40 AM
ADDED : நவ 25, 2025 08:41 AM

புதுச்சேரி:
மாகி ராஜிவ்காந்தி ஆயுர்வேத இடங்களுக்கு நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.
மாகியில் ராஜிவ் காந்தி ஆயுர்வேத கல்லுாரி பி.ஏ.எம்.எஸ்., படிப்பில் 16 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 5 நிர்வாக இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தி நிரப்ப சென்டாக் முடிவு செய்துள்ளது.
இந்த கலந்தாய்வில், ஏற்கனவே சென்டாக்கில் விண்ணப்பித்த மாணவர்களும், நீட் தேர்ச்சி பெற்ற புதிய மாணவர்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொது, ஓ.பி.சி., எம்.பி.சி., இ.டபுள்யூ.எஸ்., மீனவர், முஸ்லீம், பி.டி., பிரிவினர் 74 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 18,500 ரூபாய் செலுத்தினால் போதும். நிர்வாக இடங்களுக்கு அனைத்து பிரிவினரும் 2,35,000 ரூபாய் செலுத்த வேண் டும்.
நாளை 26ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாணவர்கள் தங்களுடைய டேஷ்போர்டு மூலம் நுழைந்து பாட பிரிவினை முன்னுரிமை கொடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

