தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
UPDATED : நவ 27, 2025 06:58 AM
ADDED : நவ 27, 2025 06:58 AM
சென்னை:
அரசுத் தேர்வுகள் இயக்ககம், மே/ஜூன் 2025 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு விடைத்தாட்களின் நகல் பதிவிறக்கம் மற்றும் மறுகூட்டல்/மறுமதிப்பீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விடைத்தாட்களின் ஒளிநகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள், நேற்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாளைப் பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, குறிப்பிட்ட கட்டணத்துடன் 27.11.2025 முதல் 01.12.2025 வரை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்கான கட்டணம் ஒரு பாடத்திற்கு ரூ.205/- மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணம் ஒரு பாடத்திற்கு ரூ.505/- ஆகும்.

