அடுத்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு
அடுத்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு
UPDATED : டிச 05, 2025 08:03 PM
ADDED : டிச 05, 2025 08:06 PM

சென்னை:
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2026ம் ஆண்டுக்கான, குரூப் - 1, குரூப் - 2, 2ஏ, குரூப் - 4 அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., எனும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, குரூப் - 1, குரூப் - 2, 2ஏ, குரூப் - 4 மற்றும் இன்னும் பிற போட்டி தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், போட்டி தேர்வு குறித்த அறிவிப்பை, முன்னதாகவே டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு வருகிறது. இதன்படி, 2026ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வு அறிவிப்பு, வெளியிடப்பட்டது.
நேர்முகத் தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிக்கான அறிவிப்பு 20.5.2026 அன்று வெளியாகி, தேர்வு 3.8.2026 அன்று நடைபெறும். குரூப்-1 தேர்விற்கான அறிவிப்பு 23.6.2026 அன்று வெளியாகி, தேர்வு 6.9.2026 அன்று நடைபெறும். டிப்ளமோ/ஐ.டி.ஐ., தகுதியுடன் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிக்கான அறிவிப்பு 7.7.2026 அன்று வெளியாகி, தேர்வு 20.9.2026 அன்று நடைபெறுகிறது.
குரூப்-2 தேர்விற்கான அறிவிப்பு 11.8.2026 அன்று வெளியாகி, தேர்வு 25.10.2026 அன்று நடைபெறும். நேர்முகத் தேர்வு உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிக்கான அறிவிப்பு 31.8.2026 அன்று வெளியாகி, தேர்வு 14.11.2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்14 தேர்விற்கான அறிவிப்பு 6.10.2026 அன்று வெளியாகி, தேர்வு 20.12.2026 அன்று நடைபெறும்.

