UPDATED : ஜன 17, 2026 11:42 AM
ADDED : ஜன 17, 2026 11:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:
டில்லியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த பெண் போலீசை, எஸ்.பி., பாராட்டினார்.
இந்திய தேசிய துப்பாக்கி சுடும் சங்கம் சார்பில், 68வது தேசிய துப்பாக்கி சுடும் போட்டி டில்லியில் நடந்தது. இதில் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் பெண் தலைமைக்காவலர் ராஜேஸ்வரி 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் ரெனவுடு ஷூட்டராக தேர்வாகினார்.
மத்திய பிரதேசத்தில் நடந்த 50 மீ., ரைபில் பிரிவு, 10 மீ., ஏர் ரைபில் பிரிவில் பங்கேற்று அதிக புள்ளிகளுடன் ரெனவுடு ஷூட்டராக தேர்வாகினார். இதனையொட்டி ராஜேஸ்வரியை, எஸ்.பி.,ஜெயக்குமார் பாராட்டினார். டி.எஸ்.பி.,ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் உடனிருந்தனர்.

