sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மருத்துவ படிப்பு சேர்க்கையில் இடஒதுக்கீடு முறைகேடு அம்பலம்

/

மருத்துவ படிப்பு சேர்க்கையில் இடஒதுக்கீடு முறைகேடு அம்பலம்

மருத்துவ படிப்பு சேர்க்கையில் இடஒதுக்கீடு முறைகேடு அம்பலம்

மருத்துவ படிப்பு சேர்க்கையில் இடஒதுக்கீடு முறைகேடு அம்பலம்


UPDATED : பிப் 01, 2026 09:23 PM

ADDED : பிப் 01, 2026 09:28 PM

Google News

UPDATED : பிப் 01, 2026 09:23 PM ADDED : பிப் 01, 2026 09:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான ஒதுக்கீட்டில் சீட் பெற்ற மாணவர்கள், பல கோடி ரூபாய் கொடுத்து சேர்க்கை பெற்ற தகவல் வெளியாகி உள்ளது.

தேர்வு கட்டாயம்

நாடு முழுதும் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இளங்கலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர இந்த தேர்வு கட்டாயம்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் சேர்க்கை வழங்கப்படுகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மருத்துவ கல்லுாரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம், ஐந்து ஏக்கர் அதற்கு மேற்பட்ட விவசாய நிலம் இருக்கக்கூடாது உட்பட பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டவர்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களாக கருதப்படுகின்றனர்.

இந்நிலையில், ஆன்லைன் கல்வி வழிகாட்டுதல் தளம் ஒன்று சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'நிகர்நிலை பல்கலைகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கான 145 இடங்களுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் கட்டணங்களாக செலுத்தப்பட்டுள்ளன.

எம்.டி., எனப்படும் முதுநிலை மருத்துவ இடத்துக்கு ஒரு மாணவர் 4.23 கோடி ரூபாய் செலுத்தியுள்ளார். பல மருத்துவ சிறப்பு பிரிவுகள், தனியார் நிறுவனங்களில் இத்தகைய சேர்க்கை நடந்துள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் பிரிவில் உரிமை கோரியவர்கள், ஒரு இடத்துக்கு குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய் செலவு செய்ததும் தெரியவந்துள்ளது.

சந்தேகம்


ஒரு சிலர், இந்த பிரிவை முறைகேடாக பயன்படுத்தி, இடங்களை பெற்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், முக்கிய முரண்பாடாக, பொருளாதாரத்தில் பின்தங்கியதாக கூறப்படும் இத்தகைய மாணவர்களால், கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அப்படி செலவழிக்க முடியுமென்றால், அவர்கள் இடஒதுக்கீடு தொடர்பான தங்கள் சான்றிதழ்களை போலியாக கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.








      Dinamalar
      Follow us