தமிழக செய்தித்துறை சார்பில் தமிழரசு மின்னிதழ் துவக்கம்
தமிழக செய்தித்துறை சார்பில் தமிழரசு மின்னிதழ் துவக்கம்
UPDATED : மார் 12, 2026 02:49 PM
ADDED : மார் 12, 2026 02:49 PM
சென்னை:
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், 'தமிழரசு' மின்னிதழின், இணையதள செயலி மற்றும் 'மொபைல்' செயலியை, அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும், 'தமிழரசு' இதழ், தற்போது மின்னிதழ் வடிவிலும் துவக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் இந்த மின்னிதழில், போட்டித் தேர்வுகளுக்கான கேள்வித்தாள், கட்டுரை எழுதும் போட்டிகள் இடம்பெறும். 'தமிழரசு' மொபைல் செயலியை, 'கூகுள் பிளே ஸ்டோரில்' பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.
மேலும், விபரங்களுக்கு www.tamilarasu.org என்ற இணையதள பக்கத்தில் அறிந்து பயன் பெறலாம்.
நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை செயலர் ராஜாராமன், இயக்குநர் வைத்தீநாதன், கூடுதல் இயக்குநர் பாஸ்கரன், மக்கள் தொடர்பு அலுவலர் மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

