sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி நீச்சல் போட்டியில் அசத்தல்

/

எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி நீச்சல் போட்டியில் அசத்தல்

எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி நீச்சல் போட்டியில் அசத்தல்

எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி நீச்சல் போட்டியில் அசத்தல்


UPDATED : மார் 16, 2026 04:10 PM

ADDED : மார் 16, 2026 04:12 PM

Google News

UPDATED : மார் 16, 2026 04:10 PM ADDED : மார் 16, 2026 04:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
செங்கல்பட்டில் நடந்து வரும் அகில இந்திய நீச்சல் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் வீரர், வீராங்கனையர், பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளனர்.

எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கான அகில இந்திய அக்வாட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையின் பாரிவேந்தர் நீச்சல் குளத்தில் நடந்து வருகிறது.

இதில் 50, 100 மீ., ப்ரீ ஸ்டைல், 50, 100 மீ., பட்டர்பிளை, 100 மீ., பேக் ஸ்ட்ரோக், 100 மீ., பிரஸ்ட் ஸ்ட்ரோக், 200 மீ., தனிநபர் மெட்லே, 800 மீ., ப்ரீ ஸ்டைல் ஆகிய எட்டு பிரிவுகளில், போட்டிகள் நடந்து வருகின்றன.

மாணவருக்கான 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் மோனிஷ்குமார், போட்டி துாரத்தை 11:20 நிமிடங்களில் கடந்து, தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதே போல், 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் ஜெயசூர்யா போட்டி துாரத்தை 1:13 நிமிடங்களில் கடந்து, தங்கப் பதக்கம் வென்றார்.

மாணவியருக்கான போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் பவித்ரா ஸ்ரீ, 800 மீட்டர் ப்ரீ ஸ்டைலில், போட்டி துாரத்தை 12:22 நிமிடங்களில் கடந்தார்; 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில், 1:25 நிமிடங்களில் கடந்தார். இந்த இரு பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.







      Dinamalar
      Follow us