sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு விழா

/

ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு விழா

ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு விழா

ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு விழா


UPDATED : மார் 24, 2026 11:05 AM

ADDED : மார் 24, 2026 11:07 AM

Google News

UPDATED : மார் 24, 2026 11:05 AM ADDED : மார் 24, 2026 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்:
ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) குப்புசாமி தலைமை தாங்கினார். வாக்காளர் விழிப்புணர்வு குழு ஒருங்கிணைப்பாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சந்திரலேகா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர் ரிஷிவந்தியம் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன், தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம், ஓட்டுக்காக வேட்பாளர்களிடமிருந்து பணம், பரிசு பொருட்கள் பெறக்கூடாது.

18 வயது நிரம்பியவர்கள் கட்டாயம் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். 100 சதவீத ஓட்டுப்பதிவின் அவசியம் குறித்து பேசினார். தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடர்ந்து, தேர்தல் விழிப்புணர்வை வலியுறுத்தி கோலப்போட்டி நடந்தது. துறை வாரியாக மாணவிகள் பங்கேற்றனர்.

பொருளியல் துறை மாணவிகள் முதல் பரிசையும், தமிழ்த்துறை மாணவிகள் இரண்டாம் பரிசையும், கணினி அறிவியல் துறை மாணவிகள் மூன்றாம் பரிசையும் பெற்றனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us