கள்ளக்குறிச்சியில் பள்ளி நுாலகத்தை பயன்படுத்திய மாணவிகளுக்கு பாராட்டு
கள்ளக்குறிச்சியில் பள்ளி நுாலகத்தை பயன்படுத்திய மாணவிகளுக்கு பாராட்டு
UPDATED : மார் 27, 2026 06:33 PM
ADDED : மார் 27, 2026 06:35 PM

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி சரோஜா சண்முகம் அறக்கட்டளை சார்பில் அரசு மகளிர் பள்ளியில் நுாலகத்தை அதிகம் பயன்படுத்திய மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நுாலகத்திற்கு தேவையான புத்தகங்கள், தினசரிகள், லைட், ரேக்குகள், மின்விசிறி, டேபிள்கள் அனைத்தும் சரோஜா சண்முகம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகிறது.
தொடர்ந்து நுாலக செயல்பாட்டினை ஒருங்கிணைக்கும் வகையில் ஆண்டுதோறும் மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளரான இறையன்பு மூலமாக புத்தகங்கள் வெளியிட்டுள்ள இப்பள்ளியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவிகள் சுவீட்டி, மதுமிதா, 8ம் வகுப்பு மாணவி நவீனா மணிகண்டன் மற்றும் பள்ளியில் தினசரி நுாலகத்திற்கு வரும் மாணவிகள், கதை போட்டி, புத்தக விமர்சனங்களில் சிறப்பு பெற்ற மாணவிகள் என 40 மாணவிகளுக்கு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடந்தது.
பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி சரோஜா சண்முகம் அறக்கட்டளை நிர்வாகி சுதா வைத்திலிங்கம் தலைமை தாங்கி மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
அறக்கட்டளை நிர்வாகி வைத்திலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியை கீதா, நுாலக ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை தேவி மயில், உதவி தலைமை ஆசிரியை வசந்தா, ஆசிரியைகள் செல்வலட்சுமி, லாவண்யா, காந்திமதி வாழ்த்துரை வழங்கினர். பள்ளி நுாலகர் கலைவாணி நன்றி கூறினார்.

