sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 09, 2026 ,பங்குனி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

திருச்செங்கோடு எஸ்.கே.வி., வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா

/

திருச்செங்கோடு எஸ்.கே.வி., வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா

திருச்செங்கோடு எஸ்.கே.வி., வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா

திருச்செங்கோடு எஸ்.கே.வி., வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா


UPDATED : ஏப் 04, 2026 03:54 PM

ADDED : ஏப் 04, 2026 03:57 PM

Google News

UPDATED : ஏப் 04, 2026 03:54 PM ADDED : ஏப் 04, 2026 03:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோட்டு:
திருச்செங்கோட்டு அடுத்த எம்.கந்தம்பாளையத்தில், எஸ்.கே.வி., வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 14வது ஆண்டு விழாவான, 'ஸ்பெக்ட்ரா-26', பள்ளி தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி தலைமையில் நடந்தது. பொருளாளர் பாலசுப்பிரமணியம், செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி உதவி பேராசிரியர் ஞான மணிகண்டன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர், ஒவ்வொரு வகுப்பிலும் அதிக மதிப்பெண் பெற்ற, மூன்று மாணவ, மாணவியருக்கு, சான்றிதழ், பரிசு கோப்பை வழங்கி பேசினார்.

அப்போது, “மாணவர்கள், மொபைல் போனுக்கு அடிமையாக கூடாது. கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மிகவும் அவசியம்,” என்றார். வேலவன் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் ஜெயந்திரவி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து, கலாசார நிகழ்ச்சிகளான நடனம், நாடகம், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us