sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 10, 2026 ,பங்குனி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

திருவள்ளூர் சி.சி., அணி கிரிக்கெட் லீக்கில் வெற்றி

/

திருவள்ளூர் சி.சி., அணி கிரிக்கெட் லீக்கில் வெற்றி

திருவள்ளூர் சி.சி., அணி கிரிக்கெட் லீக்கில் வெற்றி

திருவள்ளூர் சி.சி., அணி கிரிக்கெட் லீக்கில் வெற்றி


UPDATED : ஏப் 07, 2026 11:02 AM

ADDED : ஏப் 07, 2026 11:04 AM

Google News

UPDATED : ஏப் 07, 2026 11:02 AM ADDED : ஏப் 07, 2026 11:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
டிவிஷன் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில், திருவள்ளூர் சி.சி., அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில், யுனிவர்செல் சி.சி., அணியை தோற்கடித்தது.

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், சென்னையில் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகின்றன.

நேற்று முன்தினம் ஆவடியில் நடந்த ஆட்டத்தில், யுனிவர்செல் சி.சி., மற்றும் திருவள்ளூர் சி.சி., அணிகள் எதிர்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த யுனிவர்செல் சி.சி., அணி, திருவள்ளூர் அணியின் கட்டுப்படுத்தப்பட்ட பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 25.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்த இலக்கை துரத்திய திருவள்ளூர் சி.சி., அணி, ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும், நிதானமாக விளையாடி 24.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் ஓ.சி.எப்., அணி 23.1 ஓவர்களில் 72 ரன்களுக்கு சுருண்டது. எதிர்த்து களமிறங்கிய வீல்ஸ் இந்தியா அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெறும் ஒன்பது ஓவர்களிலேயே நான்கு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்து வெற்றியை தன்வசப்படுத்தியது.






      Dinamalar
      Follow us