sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 11, 2026 ,பங்குனி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நாமக்கல் அரசு கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

நாமக்கல் அரசு கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் அரசு கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் அரசு கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி


UPDATED : ஏப் 09, 2026 12:41 PM

ADDED : ஏப் 09, 2026 12:42 PM

Google News

UPDATED : ஏப் 09, 2026 12:41 PM ADDED : ஏப் 09, 2026 12:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு குழு, யூத் ரெட் கிராஸ், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்து, மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும், தங்கள் ஜனநாயக பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து, தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

மோகனுார் தாசில்தார் கோவிந்தசாமி, நாமக்கல் மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு தொடர்பு அலுவலர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பங்கேற்று, ஓட்டுரிமையின் முக்கியத்துவம், 100 சதவீதம் ஓட்டுப்பதிவின் அவசியம் குறித்து பேசினார்.

தொடர்ந்து, மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பாடலுக்கு, மாணவியர் நடனமாடி ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சைகை நடிப்பு நாடகம் மூலம் மாணவர்கள், 100 சதவீதம் ஓட்டுப்பதிவின் அவசியத்தை உணர்த்தினர்.

மாவட்டத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்றனர். மாணவர்களுக்கு தேர்தல் செயல்முறைகளை நேரடியாக அறிமுகப்படுத்தும் வகையில், கல்லுாரி வளாகத்தில் மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, அதன் செயல்முறைகள் மற்றும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து மாதிரி ஓட்டுப்பதிவும் நடத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us