sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேர்வெழுத அனுமதி மறுப்பு; கல்லுாரி மாணவியர் மறியல்

/

தேர்வெழுத அனுமதி மறுப்பு; கல்லுாரி மாணவியர் மறியல்

தேர்வெழுத அனுமதி மறுப்பு; கல்லுாரி மாணவியர் மறியல்

தேர்வெழுத அனுமதி மறுப்பு; கல்லுாரி மாணவியர் மறியல்


UPDATED : ஏப் 17, 2026 05:15 PM

ADDED : ஏப் 17, 2026 05:16 PM

Google News

UPDATED : ஏப் 17, 2026 05:15 PM ADDED : ஏப் 17, 2026 05:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார்:
'கல்லுாரி கட்டணத்தை செலுத்தினால் தான் தேர்வு எழுத அனுமதிப்போம்' என கூறியதாக, விளையாட்டு கோட்டாவில் தேர்வான மாணவியர் மறியலில் ஈடுபட்டனர்.

அம்பத்துார், மேனாம்பேடில் அன்னை வயலட் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு, விளையாட்டு கோட்டவில் சில மாணவியர் சேர்ந்துள்ளனர். அவர்கள் தேர்வு கட்டணத்தை மட்டும் செலுத்தி, பயின்று வந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், விளையாட்டு கோட்டாவில் தேர்வான ஒன்பது மாணவியர், இறுதியாண்டு கல்லுாரி கட்டணத்தை முழுதுமாக செலுத்தினால் தான், தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என, கல்லுாரி நிர்வாகம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த ஒன்பது மாணவியரும், தங்களது நண்பர்களுடன் நேற்று சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடந்து அங்கு வந்த புதூர் போலீசார், மாணவியரிடம் பேச்சு நடத்தினர்.

தேர்வு எழுத அனுமதிப்பதாக கல்லுாரி நிர்வாகம் கூறியதை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us