UPDATED : ஏப் 23, 2026 05:57 PM
ADDED : ஏப் 23, 2026 05:59 PM
வானூர்:
வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மன்ற விழா நடந்தது. வணிகவியல் துறை தலைவர் தேவநாதன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக ரூட்ஸ் அமைப்பின் நிறுவனர் கவிராஜ், வானூர் ஸ்டேட் வங்கி மேலாளர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு, வணிகவியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் குறித்தும் தொழில் முனைவராக வருவதற்கான தகுதிகள் குறித்தும், உயர்கல்வி தேவையினை பூர்த்தி செய்வதில் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
விழாவில் பல்கலைக்கழக தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. கவுரவ விரிவுரையாளர் ஜெயபால் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

