கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் முப்பெரும் விழா
UPDATED : ஏப் 23, 2026 10:37 PM
ADDED : ஏப் 23, 2026 10:38 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டியில் இயங்கி வரும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, மன்றங்களின் நிறைவு விழா என முப்பெரும் விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் தர்மராஜா தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் சரவணன் ஆண்டறிக்கை வாசித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கலை புல முதன்மையர் இளையாப்பிள்ளை, தொழிலதிபர் சுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள் உமா, சித்ரா, முருகானந்தன், மோட்ச ஆனந்தன், நூலகர் அசோக் குமார், வீரலட்சுமி, கண்காணிப்பாளர் மகேஷ், விருத்தாசலம் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் சங்கர் நன்றி கூறினார்.

