sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 29, 2026 ,சித்திரை 16, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தினமலர் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்

/

தினமலர் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்

தினமலர் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்

தினமலர் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்


UPDATED : ஏப் 27, 2026 10:38 AM

ADDED : ஏப் 27, 2026 10:42 AM

Google News

UPDATED : ஏப் 27, 2026 10:38 AM ADDED : ஏப் 27, 2026 10:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் (எஸ்.எல்.சி.எஸ்.,) தினமலர் - ஸ்டாரெட்ஸ் இணைந்து நடத்திய தினமலர் நீட் மாதிரி தேர்வு, தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) நடத்தும் மெயின் தேர்வை எழுதியது போன்ற உணர்வைத் தந்தது என மாணவர்கள் உற்சாகம் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்து டாக்டர் கனவில் உள்ள மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் ஆண்டுதோறும் தினமலர் சார்பில் 'நீட்' மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு மே 3ல் நடக்கவுள்ள நீட் தேர்வில் பங்கேற்க தயாராகும் மாணவர்களுக்கு மதுரை எஸ்.எல்.சி.எஸ்.,யில் நேற்று நடந்த தினமலர் நீட் மாதிரி தேர்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்பதிவு செய்தவர்கள் காலை 09:30 மணிக்கு கல்லுாரிக்கு வர வேண்டும் எனவும், 09:45 மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆர்வம் மிகுதியால் காலை 08:30 மணிக்கே பெற்றோருடன் மாணவர்கள் வருகை தந்தனர்.

நீட் தேர்வு நடைமுறைப்படியே இங்கும், தீவிர பரிசோதனைக்கு பின் சரியான நேரத்தில் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். வினாக்களுக்கு பதில் அளிக்க ஓ.எம்.ஆர்., ஷீட் வழங்கப்பட்டது. மதியம் 01:15 மணி வரை தமிழ், ஆங்கிலத்தில் தேர்வு எழுதினர்.

என்.டி.ஏ., நீட் தேர்வு போன்றே மாதிரி தேர்வும் நடத்தப்பட்டது. தேர்வு முடியும் வரை பெற்றோர் அமர்ந்திருக்க கல்லுாரி வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு மையங்கள், கல்லுாரி வளாக பகுதிகளில் மாணவர், பெற்றோருக்கு தேவையான குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

தெளிவான புரிதல் தந்தது

தேஜஸ்வினி, வில்லாபுரம்: டாக்டர் ஆவது எனது கனவு. தினமலர் நாளிதழில் மாதிரி நீட் தேர்வு குறித்து அறிந்து பங்கேற்றேன். நீட் தேர்வுக்காக ஏற்கனவே கோச்சிங் சென்று கொண்டிருக்கிறேன். மெயின் தேர்வு எப்படி இருக்கும் என்ற முழுமையான புரிதல் இல்லை. இத்தேர்வு மூலம் தெளிவான புரிதல் ஏற்பட்டுள்ளது. வேதியியல் பிரிவில் இடம் பெற்ற வினாக்கள் பெரிதாக இருந்தது. அதை படிக்க நேரம் ஆனது. இதனால் நேரம் மேலாண்மை முக்கியம் என்பதை உணர்ந்தேன். மாதிரி தேர்வு நல்ல அனுபவத்தை தந்தது.

நுட்பமான வினாக்கள்

ப்ரதிகா தேவி மாரி, மேலுார்: நான் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்தேன். பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களில் இருந்து வினாக்கள் ஆழமாகவும் நுட்பமாகவும் கேட்கப்பட்டிருந்தன. இத்தேர்வு மூலம் நீட் தேர்வுக்கான வினாத்தாள் மாதிரி எப்படி இருக்கும் என தெரிந்தது. இயற்பியலில் தியரி வினாக்களும், 'ஆர்கானிக் கெமிஸ்ட்ரி' பகுதி கொஞ்சம் கடினமாகவும் இருந்தது. 'மைனஸ்' மதிப்பெண் உண்டு என்பதால் தெரியாத வினாக்களை எழுதவில்லை.

நம்பிக்கை அதிகரித்துள்ளது

ஜெய மோன வர்ஷா, அலங்காநல்லுார்: தினமலர் நடத்திய இத்தேர்வில் பங்கேற்றது மெயின் தேர்வை எதிர்கொள்ளும் நம்பிக்கையை தந்தது. மாதிரி தேர்வில் இடம் பெற்ற வினாக்கள் அனைத்தும் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. இயற்பியல் வினாக்கள் தியரி அடிப்படையிலும், வேதியியல் பகுதி தீர்வு காணும் அடிப்படையிலும் இருந்தது. என்.டி.ஏ., நடத்தும் மெயின் தேர்வை எழுதிய உணர்வை தந்தது. இதனால் நீட் தேர்வை எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையை அதிகரித்துள்ளது தினமலர்.

என்னை அறிய வாய்ப்பு

ஸ்ரீபிரியா, அருப்புக்கோட்டை: மே 3ல் நடக்கும் நீட் தேர்வு எப்படி இருக்குமோ என்ற பதற்றம் இருந்தது. என் தந்தை தியாகராஜன் தீவிரமான தினமலர் வாசகர். இந்த மாதிரித் தேர்வை எழுத அவர் தான் அறிவுறுத்தினார். இதன் மூலம் நீட் தேர்வு குறித்த அச்சம் நீங்கிவிட்டது. வீட்டிலும், பள்ளியிலும் மாதிரித் தேர்வு நடத்தியிருந்தாலும், தினமலர் தேர்வு என்.டி.ஏ., நடத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது நல்ல அனுபவமாக இருந்தது. என்னை நான் முழுமையாக பரிசோதிக்க இது வாய்ப்பானது.

நேர மேலாண்மையை புரிந்தேன்

சண்முகபிரியன், மானாமதுரை: இத்தேர்வு எழுதியதன் மூலம் மே 3ல் நடக்கும் நீட் தேர்வில் எவ்வாறு வினாக்கள் கேட்கப்படும் என்ற அடிப்படை புரிதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உயிரியல், இயற்பியல், வேதியியல் பகுதி வினாக்களும், தெரிந்த வினாவை எவ்வாறு 'டுவிஸ்ட்' வைத்து கேட்க முடியும் என்ற நுட்பமும் இந்த தினமலர் மாதிரி மூலம் தெளிவாக தெரிந்து கொண்டேன். குறிப்பாக நேர மேலாண்மை குறித்தும் இப்போது தான் புரிதல் ஏற்பட்டுள்ளது.

தினமலர் நாளிதழுக்கு நன்றி

அஷ்வதா: இத்தேர்வு எழுத கேரளாவில் இருந்து பெற்றோருடன் வந்தேன். மே 3ல் எப்படி எழுதப்போகிறோமோ என டென்ஷன் இருந்தது. இத்தேர்வு மூலம் மெயின் தேர்வு எப்படி என்ற தெளிவு கிடைத்துள்ளது. மாதிரி தேர்வில் பிளஸ் 2 பாடத்தில் அதிக வினாக்கள் இடம் பெற்றது போல் உள்ளது. எப்படி கேட்கப்படும் என்ற புரிதல் தெரிந்தது. இத்தேர்வில் பங்கேற்றதன் மூலம் மெயின் தேர்வில் வினாக்கள் எப்படி மாற்றிக் கேட்டாலும் நன்கு எழுதிவிடலாம் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நன்றி தினமலர்.

நாளை முடிவு வெளியீடு

மாதிரித் தேர்வுக்கான முடிவு நாளை (ஏப்., 28) தினமலர் நாளிதழில் வெளியிடப்படும். அதிக மதிப்பெண் பெற்ற 20 பேரின் மதிப்பெண்கள், அவர்களின் பதிவு எண்களும் அதில் வெளியாகும். மற்றவர்களின் வெற்றி விபரம் ஸ்டாரெட் நிறுவன இணையதளத்தில் (www.staretsacademy.com) வெளியிடப்படும்.






      Dinamalar
      Follow us