UPDATED : ஏப் 27, 2026 10:51 AM
ADDED : ஏப் 27, 2026 10:53 AM

சென்னை:
நடப்பு கல்வியாண்டு, இணையவழி மற்றும் தொலைதூர பட்ட படிப்புகள் நடத்துவதற்கான அங்கீகாரம் பெற, உயர் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க, யு.ஜி.சி., எனும் பல்கலை மானிய குழு அழைப்பு விடுத்துள்ளது.
நாடு முழுதும் உள்ள பல்கலை மற்றும் கல்லூரிகள், 'ஆன்லைன்' மற்றும் தொலைதூர பட்ட படிப்புகளை நடத்த, யு.ஜி.சி.,யிடம் உரிய அங்கீகாரம் பெறுவது அவசியம். அந்த வகையில், 2026 - 27ம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் பெற, உயர் கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., அழைப்பு விடுத்துள்ளது.
உயர் கல்வி நிறுவனங்கள், இன்று முதல், மே 11ம் தேதி வரை, https://deb.ugc.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான அசல் ஆவணங்களை, டில்லியில் உள்ள தொலைதூர கல்வி துறை தலைமை அலுவலகத்துக்கு, மே 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.

