நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியில் சர்வதேச மாநாடு
நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியில் சர்வதேச மாநாடு
UPDATED : ஏப் 29, 2026 05:35 PM
ADDED : ஏப் 29, 2026 05:42 PM
நத்தம்:
நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில் 'திறன்மிகு புத்தாக்கங்கள்' குறித்த 2 நாள் சர்வதேச மாநாடு நடந்தது.
கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மின்னணுவியல், தொலைத்தொடர்பியல் துறைத்தலைவர் அமீனாபானு வரவேற்றார். இயந்திரவியல் துறைத்தலைவர் பாலசுப்ரமணி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.
கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி விஞ்ஞானி அருண் கே.பிரசாத், எத்தியோப்பியா வொல்லேகா பல்கலை இயந்திர பொறியியல் துறைத்தலைவர் மகேஷ்கோபால், திருச்சி அரசு பொறியியல் கல்லுாரி கணினி அறிவியல், பொறியியல் பேராசிரியர் அசோக்குமார், ஈரோடு அரசு பொறியியல் கல்லுாரி கணினி அறிவியல் பேராசிரியர் மாரிக்கண்ணன், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் தொழில்நுட்பக்கல்லுாரி மின், மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் வெங்கடேசன் ஆகியோர் மாநாட்டின் பல்வேறு பிரிவுகளுக்கு தலைமை தாங்கினர்.
தொடர்ந்து தொழில்நுட்ப அமர்வுகள் நேரடி, இணையவழி முறையில் பல அரங்குகளில் நடந்தது. ஓமன், எத்தியோப்பியா, மலேசியா நாடுகள், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து கலந்துரையாடினர். சிறந்த கட்டுரைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் கல்பனா நன்றி கூறினார்.

