sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்டம் சார்ந்த தன்னார்வ பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

சட்டம் சார்ந்த தன்னார்வ பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

சட்டம் சார்ந்த தன்னார்வ பணி விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : மே 03, 2026 02:38 PM

ADDED : மே 03, 2026 02:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 03, 2026 02:38 PM ADDED : மே 03, 2026 02:40 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:


கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், சங்கராபுரம் ஆகிய வட்ட சட்டப் பணிகள் குழுவிற்கு குழந்தை தொழிலாளர் முறை, கடத்தலுக்கு எதிரான குற்றங்கள், அடிமைத்தனத்திலிருந்து காணாமல் போன குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இப்பணிக்கு சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உளவியாளர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், சட்ட மாணவர்கள், திருநங்கைள் உட்பட சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் https://kallakurichi.dcourts.gov.in/ என்ற கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வரும் 8ம் தேதி மாலை 05:30 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு மதிப்பூதியம் தவிர சம்பளம், தொகுப்பூதியம் மற்றும் தினக் கூலி ஏதும் கிடையாது. மேலும், விபரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அல்லது வட்ட வட்டப்பணிகள் குழுக்களை அணுகலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us