sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யு.ஜி.சி., நெட்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

யு.ஜி.சி., நெட்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

யு.ஜி.சி., நெட்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்


UPDATED : மே 05, 2026 10:00 AM

ADDED : மே 05, 2026 10:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2026 10:00 AM ADDED : மே 05, 2026 10:00 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை, உதவிப் பேராசிரியர் பணி மற்றும் பிஎச்.டி., மாணவர் சேர்க்கை ஆகியவற்றிற்கான தகுதியை நிர்ணயிக்கும் யு.ஜி.சி., நெட் ஜூன் 2026 தேர்விற்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 20, 2026 அன்று இரவு 11:50 மணி வரை நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும் மே 20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், அவற்றை மேற்கொள்வதற்கான கால அவகாசம் மே 22 முதல் மே 24 வரை வழங்கப்படும்.

இந்தத் தேர்வானது மொத்தம் 85 பாடங்களுக்குக் கணினி வழித் தேர்வாக, வரும் ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் குறித்த விவரம் ஜூன் 10ஆம் தேதி வரையிலும், தேர்வுக்கான அனுமதிச் சீட்டு ஜூன் 15ஆம் தேதி வரையிலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப் பிரிவினருக்கு ரூ.1150, பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.600, மற்றும் எஸ்.சி.,/எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.325 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். மேலும், ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பப் படிவத்தில் தங்களின் சொந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு 011 - 40759000 அல்லது 011 - 69227700 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us