வனவாசி அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
வனவாசி அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
UPDATED : மே 08, 2026 09:35 PM
ADDED : மே 08, 2026 09:38 PM
வனவாசி:
சேலம் மாவட்டம் வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், 2026 - 27ம் ஆண்டுக்கு, முதலாண்டு டிப்ளமோ, இரண்டாம் ஆண்டு பட்டய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த, 4 முதல் தொடங்கி நடந்து வருகிறது.
அங்கு சிவில், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி பொறியியல், டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னாலஜி, இன்டர்நெட் ஆப் திங்ஸ், ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ் ஆகிய தொழில்நுட்ப படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. www.tnpoly.in என்ற இணையதளத்திலும், கல்லூரியில் உள்ள உதவி மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
முதலாண்டு டிப்ளமோ படிப்பில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டி.எம்.டி., வகுப்பில் சேர, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்பில் சேர, பிளஸ் 2, ஐ.டி.ஐ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம், 150 ரூபாய். எஸ்.டி., எஸ்.சி., மாணவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதலாண்டு மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப பதிவு மற்றும் கட்டணம் செலுத்த, வரும், 30 கடைசி நாளாகும். நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்புக்கு, வரும், 25 கடைசி நாள் என, பாலிடெக்னிக் முதல்வர் வரதகுரு தெரிவித்துள்ளார்.
