sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சக்தி விக்னேஸ்வரா பள்ளி மாணவர்கள் அசத்தல் சாதனை

சக்தி விக்னேஸ்வரா பள்ளி மாணவர்கள் அசத்தல் சாதனை

சக்தி விக்னேஸ்வரா பள்ளி மாணவர்கள் அசத்தல் சாதனை


UPDATED : மே 10, 2026 07:38 PM

ADDED : மே 10, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 07:38 PM ADDED : மே 10, 2026 07:40 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
பொங்குபாளையம், சக்தி விக்னேஸ்வரா பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெருமாநல்லுார் அருகிலுள்ள பொங்குபாளையத்தில் செயல்படும் சக்தி விக்னேஸ்வரா கல்வி நிலைய மாணவர்கள் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணவர்கள் 119 பேரும் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

மாணவர் பிரனீத் 600க்கு 596 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். அவர் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. நரேன் கார்த்திக் 591 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி இந்துமதி 585 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றனர். தமிழ் மொழி பாடத்தில் மாணவர் இளநிதி 100 மதிப்பெண் பெற்றார்.

மேலும் கணினி அறிவியலில் 9 பேர் 100 மதிப்பெண் பெற்றனர். வணிகவியல், வேதியியல், கணிதம், வணிக கணிதவியல் ஆகிய பாடங்களில் தலா ஒரு மாணவரும் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் பத்து பேர், ஆங்கிலத்தில் ஐந்து பேர் 99 மதிப்பெண் பெற்றனர்.

பிளஸ் 2 பொது தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி முதல்வர் சக்தி வேலுசாமி, பள்ளி தாளாளர் மயிலாவதி, பள்ளி செயலாளர் தாமரைக் கண்ணன், பள்ளி ஆலோசகர் தேவராஜன், உதவி தலைமை ஆசிரியர் சத்யராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us