sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஈரோடு சட்டக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை தீவிரம்

ஈரோடு சட்டக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை தீவிரம்

ஈரோடு சட்டக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை தீவிரம்


UPDATED : மே 10, 2026 09:54 PM

ADDED : மே 10, 2026 09:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 09:54 PM ADDED : மே 10, 2026 09:55 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோட்டின் முதல் தனியார் சட்டக் கல்லூரியான, ஈரோடு சட்டக் கல்லூரி, 2022 - 23ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தரமான கல்வியை வழங்கி வருகிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக ஐந்தாண்டு கால பி.ஏ., எல்.எல்.பி., படிப்பும், ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்களுக்காக மூன்றாண்டு கால எல்.எல்.பி., படிப்பும் உள்ளது. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா, 60 இடங்களுடன் தொடங்கப்பட்ட கல்லூரி, மூன்றாண்டுகளாக தொடர்ந்து இடங்களை முழுமையாக பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இச்சிறப்பான செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் கூடுதலாக ஒரு பிரிவிற்கு தலா, 60 இடங்கள் அனுமதி வழங்கியுள்ளது.

2022 - 23ல் சேர்ந்த முதற்பிரிவு மாணவர்கள், தற்போது படிப்பை வெற்றிகரமாக முடித்து சமூகத்தில் நல்நிலையில் உள்ளனர். 2026 - 27ம் கல்வியாண்டிற்கான சேர்க்கை தற்போது நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us