sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலின அடையாளமில்லாத தமிழர் ஸ்காட்லாந்து எம்.பி.,யாக தேர்வு

பாலின அடையாளமில்லாத தமிழர் ஸ்காட்லாந்து எம்.பி.,யாக தேர்வு

பாலின அடையாளமில்லாத தமிழர் ஸ்காட்லாந்து எம்.பி.,யாக தேர்வு


UPDATED : மே 11, 2026 11:38 AM

ADDED : மே 11, 2026 11:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2026 11:38 AM ADDED : மே 11, 2026 11:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

லண்டன்:
ஸ்காட்லாந்து பார்லி மென்டின் எம்.பி., யாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பாலின அடையாளமில்லாதவர் என்ற பெருமையுடன் கியூ மணிவண்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில், சமீபத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற்றது. இதில், ஸ்காட்டிஷ் கிரீன்ஸ் கட்சி சார்பில், அங்குள்ள எடின்பர்க் மற்றும் லோதியன்ஸ் கிழக்கு தொகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கியூ மணிவண்ணன் போட்டியிட்டார்.

'நான் - பைனரி' எனப்படும் பாலின அடையாளமற்றவர் என குறிப்பிட்டு, தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்ற அவர், அந்நாட்டு பார்லிமென்டின் முதல் பாலின அடையாளமில்லாத உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

குறுகிய கால விசாக்களில் உள்ள வெளிநாட்டினர் கூட, காலவரையற்ற வசிப்பிட அனுமதி அல்லது நிரந்தர குடியுரிமை இல்லாவிட்டாலும் தேர்தலில் போட்டியிடும் வகையில் சமீபத்தில் அங்கு சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி, கியூ மணிவண்ணன் இந்தத் தேர்தலில் போட்டியிட முடிந்தது. விளிம்புநிலை மக்கள், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் நலன்களுக்காகக் குரல் கொடுப்பதைத் தன் நோக்கமாகக் கொண்டுள்ள இவர், 2021ல் ஸ்காட்லாந்தில் குடிபெயர்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us