கோத்தகிரி கிளை நுாலகத்தில் கோடைகால பயிற்சி முகாம்
கோத்தகிரி கிளை நுாலகத்தில் கோடைகால பயிற்சி முகாம்
UPDATED : மே 12, 2026 06:13 PM
ADDED : மே 12, 2026 06:14 PM
கோத்தகிரி:
கோத்தகிரி கிளைகள் நுாலகத்தில், மாவட்ட நுாலகத்துறை மற்றும் வாசகர் வட்டம் சார்பில், மாணவர்களுக்கு கோடை கால முகாம் துவங்கியது. வாசகர் வட்ட தலைவர் கோபால் தலைமை வகித்தார்.
கோத்தகிரி குடிமக்கள் மன்ற தலைவர் ராஜ்குமார், செயலாளர் வக்கீல் முருகன், அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி முகாமில், 'மாணவர்களுக்கு ஒரு மாத காலம் அறிவுத்திறன் மேம்படும் வகையில், கற்றல் நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படும். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில் பயனுள்ளதாக அமைத்திட நுாலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், உபதலை சாய் நிவாஸ் ஆன்மிக அமைப்பின் செயலாளர் தர்மன், ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் மாதன், நல் நுாலகர் விருது பெற்ற அமுதா உட்பட, மாணவர்கள் பலர் பங்கேற்றனர். வாசகர் வட்ட துணைத்தலைவர் முகனவர் லிங்கன் வரவேற்றார். வாசகர் வட்ட புரவலர் மோகன் நன்றி கூறினார்.
