UPDATED : மே 12, 2026 06:14 PM
ADDED : மே 12, 2026 06:16 PM
திருப்பூர்:
தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சுந்தரமூர்த்தி அறிக்கை:
மக்கள் பணியாற்ற உள்ள த.வெ.க. அரசுக்கு வாழ்த்துக்கள். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் கல்வி கட்டணம், சேர்க்கை கட்டணம், கணினி கட்டணம், பராமரிப்பு கட்டணம், தேர்வு கட்டணம் என, எவ்வித கட்டணமும் பெறாமல் முற்றிலும் இலவசமாக கல்வியை தர வேண்டும்.
அரசு பள்ளி, அலுவலகங்களில் எந்தவொரு அலுவலகத்திலும் ஏற்படுகின்ற காலிப் பணியிடங்களில், தொகுப்பூதியத்திலோ, ஒப்பந்த அடிப்படையிலோ, தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்ய கூடாது.
காலமுறை ஊதியம் தந்து நிரந்தர பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என, அரசை வலியுறுத்தி போராடி வருகிறோம். திராவிட அரசுகள் மாறி மாறி எங்களை ஏமாற்றி வருகின்றனர். தற்போது அமைந்துள்ள புதிய அரசு, எங்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
